உழைப்புக்கு கிடைக்கப் போகும் பரிசு.. ஜெய்ஸ்வால், சிவம் துபேவுக்கு பிசிசிஐ வழங்கப் போகும் பிரமோஷன்
ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்க்கிறது. இந்த தொடரில் பேட்டிங் துறையில் சிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர்.
அதில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான சிவம் துபே சுமாராக செயல்பட்டதால் ஆரம்பத்திலேயே கழற்றி விடப்பட்டார். அதன் பின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளில் தடுமாறிய அவரை 2022இல் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நம்பி வாங்கியது. அங்கு தோனி தலைமையில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய துபே 2023 சீசனில் 411 ரன்கள் விளாசி சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார்.
விரைவில் பிரமோஷன்:
அதன் காரணமாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகி
தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். மறுபுறம் 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் 400 ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜெயஸ்வால் 3 வகையான உள்ளூர் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து வந்தார்.
அதன் உச்சமாக கடந்த ஐபிஎல் தொடரில் 625 ரன்கள் குவித்து அதிவேகமாக அரை சதமடித்து இரட்டை சாதனை படைத்த அவர் 2023 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக அறிமுகமானார்.