உஷார்.! இந்த பழத்தை எல்லாம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் என்னாகும் தெரியுமா.?!
பலருக்கும் பழங்களை சாப்பிடுவது மிகவும் பிடித்தமான விஷயமாகும். ஆனால் பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்ற வரையறை இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.
சில பழங்களை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் அருந்தக்கூடாது. அது என்ன பழங்கள் என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழத்தில் அதிகப்படியான மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் இரண்டும் இருக்கிறது. எனவே வாழைப்பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்ததாக தர்பூசணி பழம். இந்த பழத்தில் அதிகப்படியான நீர் சத்து இருக்கிறது. எனவே நாம் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் பின் தண்ணீர் குடித்தால் குடல் வீக்கம் ஏற்பட்டு செரிமான பிரச்சனை ஏற்படலாம். மேலும் தர்பூசணியை மதிய வேளையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும்.
பப்பாளி மற்றும் அன்னாசி பழத்தை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் இது வயிறை மந்தமாக்கி, வயிற்று போக்கு ஏற்பட காரணமாக இருக்கும்.
மாம்பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், அதில் உள்ள என்ஸைமஸ் செரிமான அமைப்புகளை கடுமையாக பாதிக்கும்.
ஆரஞ்சு பழத்தில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கிறது. எனவே அதை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது இதை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் வயிறு மந்தமாகி வயிற்று வலி ஏற்படலாம்.