உஷார் மக்களே! புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் ‘சில’ உணவுகள்!

உடலுக்கு அடிப்படையாக உள்ள செல்கள் என்னும் உயிரணுக்களை பாதிக்கும் நோயைத் தான் புற்றுநோய் என்கிறோம். இந்த நோய் வந்துவிட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி, அதற்கான பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த பெயரை கேட்டாலே மக்களின் மனதில் தோன்றும் பயமும் பாதிப்பும் அதிகம் தான் என்றால் மிகையில்லை.

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோய் என்பது அனைவர் வீட்டிலும் கேள்விப்படும் ஒரு பெயராக ஆகிவிட்டது. நமது உணவு பழக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நானும் மறுக்க முடியாது. இந்நிலையில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்

பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு வீட்டு வைக்கும் என்று தொடர்ந்து உணவு நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்புகளும் சோடியமும் அதிகம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் நைட்ரேட்டுகள் கேன்சர் அபாயத்தை அதிகரிக்கும் கூறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நைட்ரேட்டுகளை சூடு படுத்தும் போது அல்லது செரிமானத்தின் போது அது நைட்ரோ சமை nகளை வெளியிடுகிறது. இது வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும். இதை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை வழக்கமாக அருங்குவது மார்பகப் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்று நோய் ஏற்படும் அபாயத்தை பெருமளவு அதிகரிக்கும். மேலும் உடல் பருமன் மற்றும் நீரழிவு ஏற்படும் அபாயத்தையும் பெருமளவு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை சேர்த்த பானங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பெரிதும் பாதிக்கும். வளர்ச்சிதை மாற்றத்திற்கும் புற்று நோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில், அதன் ஆயுளை அதிகரிக்க பல வகையான ரசாயனங்கள், சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சேர்க்கப்படுகின்றன. இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதோடு உடல் பருமனையும் ஏற்படுகிறது. மேலும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி முக்கிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை ஏற்படுத்தி பலவித உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

எண்ணெயில் பொரித்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும். அதிலும் அதிக வெப்பத்தில், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்கள் மிகவும் ஆபத்தானவை. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிக அதிக அளவில் உள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் காணப்படும் மிக அதிக அளவிலான கொழுப்பு மற்றும் புரோட்டீன் கலவை புற்றுநோயை உருவாக்கக் கூடியது. எனவே இதை தவிர்ப்பதன் மூலம் கேன்சர் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம்.

மதுபானம்

மதுபானத்தை அதிக அளவு உட்கொள்வது எல்லா வகையிலும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
முக்கியமாக கல்லீரலை பாதித்து, கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் ஹார்மோன் அளவை பாதிக்கும் ஆல்கஹால், ஹார்மோன் தொடர்பான உடல்நல பிரச்சனைகளையும் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *