Beauty Tips : முகத்தில் கொட்டி கிடக்கும் பருக்கள்… போக்க 3 வழிகள் இதோ..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!
முகப்பருவை போக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள 3 குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்றினால் மட்டும் போதும்!
பொதுவாகவே, எல்லாரும் தங்கள் முகம் எப்போதும் அழகாகவும், பொலிவாகவும் இருக்க விரும்புவார்கள். ஆனால் சிலருக்கு அவர்களின் முக அழகை கெடுக்கும் விதமாக முகத்தில் பருக்கள் நிறைந்து இருக்கும். என்ன செய்தாலும் அவை குறையாது.
அதுமட்டுமின்றி, முகப்பருவைப் போக்க பலர் பல வகையான கிரீம்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால் சருமம் பாதிக்கப்படுமே தவிர, பருக்கள் குறையாது. முகத்தில் எண்ணெய் அதிகமாக இருப்பதாலே இப்படி பருக்கள் வருகிறது. இதுமட்டுமின்றி, அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் சில எளிய குறிப்புகள் மூலம் முகப்பருவை குறைக்கலாம். இப்போது அதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்..
கிரீன் டீ: கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் நன்மை பயக்கும் தெரியுமா.. ஆம், கிரீன் டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகப்பருவை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதை பயன்படுத்த முதலில், கொதிக்கும் நீரில் கிரீன் டீ பாக்கெட் போட்டு ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறிய பின் இந்த கிரீன் டீ தண்ணீரை பருக்கள் மீது தடவினால் பருக்கள் குறையும்.
கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெலில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு போன்ற பல பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, இந்த ஜெல்லை பயன்படுத்தி முகப்பருவை குறைக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல்லை தேனுடன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் குறையும். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் பருக்க படிப்படியாக குறைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.
சந்தனம்: முகப்பருவை குறைக்க சந்தனம் பெரிதும் உதவும். ஏனெனில், இதில் ஆண்டிபிரைடிக், ஆண்டிசெப்டிக் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை முகப்பருவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முதலில், சந்தனப் பொடியை எடுத்து அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்கள் மீது மட்டும் தடவி, சில மணி நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து பயன்படுத்தினால் முகப்பருக்கள் விரைவில் குறையும்.