நுரையீரல் நோய்க்கு அருமருந்தாகும் பீட்ருட் ஜூஸ்!
- சுவாச அழற்சியை கவனிக்காமல் அப்படியே விட்டால் காலப்போக்கில் மோசமாக வாய்ப்பு உள்ளது.
- அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பீட்ரூட்.
- நைட்ரேட் நிறைந்த பீட்ரூட் ஜூஸைக் குடிப்பவர்களின் இரத்த அழுத்தம் குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது.
என்பது ஒரு தீவிரமான நுரையீரல் நிலையாகும். இந்த பாதிப்பு நுரையீரல் ஆக்ஸிஜன் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு நுரையீரல் ஆக்ஸிஜன் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்துகிறது. உலகளவில் சுமார் 400 மில்லியன் மக்களை இந்த நோய் பாதித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
இந்த சுவாச அழற்சியை கவனிக்காமல் அப்படியே விட்டால் காலப்போக்கில் மோசமாக வாய்ப்பு உள்ளது. இது சிகிச்சையளிக்கக் கூடியது. ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இந்நிலையில், சுவாச ஆரோக்கியம் தொடர்பான இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி, நைட்ரேட்டுகளின் அதிகம் கொண்ட பீட்ரூட் ஜூஸ் மிகவும் பலனளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
“பீட்ரூட் சாறு நைட்ரேட்டின் ஆதாரமாக விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இரத்த அழுத்தத்தில் சில குறுகிய கால விளைவுகளைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் நிக்கோலஸ் ஹாப்கின்சன் கூறினார். நைட்ரேட் நிறைந்த பீட்ரூட் ஜூஸைக் குடித்த நோயாளிகள், ஆறு நிமிடங்களில் நடக்கக்கூடிய தூரத்தை சராசரியாக சுமார் 30 மீட்டர்கள் அதிகரித்துள்ளனர் என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் ஹாப்கின்சன் இது குறித்து கூறுகையில்: “நைட்ரேட் நிறைந்த பீட்ரூட் ஜூஸைக் குடிப்பவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து, இரத்த நாளங்கள் விரிவடைந்தததை ஆய்வின் முடிவில் நாங்கள் கண்டறிந்தோம். சிஓபிடி உள்ளவர்கள் ஆறு நிமிடங்களில் எவ்வளவு தூரம் வரை நடக்க முடியும் முடியும் என்பதையும் இந்த சாறு வியத்தக்க வகையில் மாற்றியது.