பட்ஜெட்டுக்கு முன் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.. இல்லாவிட்டால் கஷ்டம்..!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் 1ம் தேதி தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்.
இந்த பட்ஜெட்டில் எதுவும் வரி சலுகைகள் இருக்குமா என்று அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பட்ஜெட் தினத்தன்று நிதியமைச்சர் 10-12 ஆவணங்களை தாக்கல் செய்கிறார். ஆண்டு நிதிநிலை அறிக்கை இந்த ஆவணங்களில் முதன்மையான மற்றும் மிகவும் முக்கியமானது. பட்ஜெட்டுக்கு முன்னதாக ஆண்டு நிதி அறிக்கை, பொருளாதார ஆய்வறிக்கை போன்ற பட்ஜெட் தொடர்பான வார்த்தைகளை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்க.
ஆண்டு நிதி அறிக்கை (Annual Financial Statement): ஒவ்வொரு நிதியாண்டுக்கும் எதிர்பார்க்கப்படும் வரவுகள் மற்றும் செலவினங்களை விவரிக்கும் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 112வது பிரிவு உத்தரவிடுகிறது இந்த ஆவணம் பெரும்பாலும் 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது, அது பொது கணக்கு, தற்செயல் நிதி மற்றும் ஒருங்கிணைந்த நிதி. பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey): மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பு நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.
முக்கிய பொருளாதார குறிகாட்டிகள் மற்றும் பொருளாதாரத்தின் நிலை ஆகியவற்றின் மதிப்பீடு பொருளாதார ஆய்வறிக்கை மூலம் வழங்கப்படுகிறது. வரும் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடையும் இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கடந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டு இருந்தது. வரி விதிப்பு (Tax regime): வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகள் வருமான வரி விதிப்பால் குறிப்பிடப்படுகின்றன.
2020-21ம் நிதியாண்டில் புதிய வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி முறையை நிதி அமைச்சர் வெளியிட்டார். புதிய வரி விதிப்பின்கீழ் பல்வேறு வரிப் பிரிவுகளுக்கான வரி விகிதங்களை அரசாங்கம் குறைத்தது. பண மசோதா (Money Bill)
பண மசோதா என்பது குறிப்பிட்ட வகையான நிதி மசோதா. பண மசோதா வரிகள், வருவாய்கள் மற்றும் அரசாங்க செலவுகள் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை தீர்க்கும். ஒரு மசோதாவில் இந்திய அரசியலமைப்பின் 110 (1) (a) முதல் (g) வரை பட்டியலிடப்பட்டுள்ள விஷயங்கள் இருந்தால் மட்டுமே அது பண மசோதாவாக கருதப்படும்.
பண மசோதாவை மக்களவையில் மட்டுமே கேட்க முடியும். நிதி மசோதா (Finance Bill): நிதி மசோதா என்பது ஒரு குறிப்பிட்ட நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் வரவுகள், செலவுகள் மற்றும் ஒதுக்கீடுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு முக்கியமான பட்ஜெட்