டைட்டில் வின்னர் ஆக முடியாத சோகத்தில் இப்படியா இருப்பது? சரவணனின் மோசமான கெட்டப்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவண விக்ரமின் புதிய தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டவர் தான் சரவண விக்ரம். இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தெரிவு செய்யப்பட்டு கோப்பையை தட்டிச் சென்றார்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, உள்ளே விளையாடும் போட்டியாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் வெளியில் இருந்து அவர்களை வெற்றிபெற வைக்க பல வழிகளில் முயற்சித்து வருவார்கள்.
அப்படியொரு வேலையை தான் சரவண விக்ரமின் நண்பர்கள் செய்தனர். இந்நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என்று போஸ்ட் வெளியிட்டு அசத்தினர்.
ஆனால் இதையே வைத்து நெட்டிசன்கள் சரவண விக்ரமை கலாய்த்து மீம்ஸ் வெளியிடவும் செய்தனர். வீட்டிற்குள் இருக்கையில் ரசிகர்களிடம் நல்ல மதிப்பையும் பெற்றார். ஆனால் வெளியேறும் முன்பு மாயா கேங் உடன் சேர்ந்து பச்சோந்தியாக மாறிவிட்டதாக ரசிகர்களின் வெறுப்பினை பெற்றார்.
சரவணனின் புதிய கெட்டப்
அந்நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னரும் மாயா, பூர்ணிமா, அக்ஷயா, நிக்சன் ஆகியோருடன் சேர்ந்து ஜாலியாக அவுட்டிங் சென்று வருகிறார் சரவண விக்ரம்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சமூக வலைத்தளங்களில் தலைகாட்டாமல் இருந்த சரவணன் தற்போது போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் தலை முடியையும், தாடியையும் அதிகமாக வளர்த்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் டைட்டில் கிடைக்காத சோகத்தில் இப்படி கெட்டப்பை மாற்றி சுற்றி வருகிறாரோ என்று கலாய்த்து வருகின்றனர்.