தொப்பையை உடனடியாக குறைக்கணுமா? இந்த எளிய பயிற்சிகளை தினமும் செய்யவும்!

இருப்பினும், உடலின் பிட்னஸ் குறித்து அதிகம் கவலை படும், கவனம் செலுத்தும் நபர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாகவும் பிட் ஆகவும் இருக்க நிறைய முயற்சிகளை செய்கின்றனர்.
அதனால் பலர் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களை செய்கின்றனர். உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு உங்கள் அழகை கெடுக்கலாம். மேலும், உங்கள் தோற்றத்தை மாற்ற கூடும். அதிலும் தொப்பை உடலில் அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலிருந்து விடுபட, வீட்டிலேயே தினசரி சில எளிய பயிற்சிகளைச் செய்ய வேண்டும். தொப்பையை குறைக்க என்னென்ன பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
தொப்பையை குறைக்க பர்ஃபி உடற்பயிற்சி (Burpee Exercise) தினசரி செய்யலாம். பர்ஃபி உடற்பயிற்சி வயிற்றில் உள்ள தொப்பையை கரைப்பதோடு, உங்கள் மார்பு, தோள்கள் மற்றூம் இடுப்பை மிகவும் வலிமையாக்குகிறது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்தப் பயிற்சியைச் செய்ய, நேராக நின்று, பிறகு, உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் இரு கைகளையும் தரையில் வைக்கவும்.
உள்ளங்கையில் முழு எடையை போட்டு, பாதங்களை பின்னோக்கி உதைத்து புஷ்அப் நிலைக்கு வரவும். அதன் பிறகு பின் பக்கத்திலிருந்து கால்களை நகர்த்தவும். இதற்குப் பிறகு, கால்களை மீண்டும் கைகளுக்கு அருகில் கொண்டு வாருங்கள். முக்கியமாக இடுப்பு வளைந்து இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு எழுந்து நின்று கொள்ளவும். இதே போல தினசரி 10 முறை செய்யவும்.