Benefits of ABC Juice : தினமும் ஒரு டம்ளர் இந்த ஜூஸ்! உடலுக்கு கிடைப்பதோ இத்தனை நன்மைகள்!

ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் வைட்டமின்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை சாப்பிடுவது உடல் அழகு பெறுகிறது. இது சிறப்பான கழிவுநீக்க பானம் ஆகும். இது உங்கள் சருமத்துக்கு புத்துயிர் கொடுக்கிறது. ஏபிசி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

வயோதிகத்தை தடுக்கிறது

தினமும் ஏபிசி ஜூஸ் குடிப்பது உங்கள் சருமம் முதிர்ச்சியடைவதை தடுக்கிறது. சருமம் பொலிவின்றி இருப்பதை தடுக்கிறது.

ஆரோக்கியமான நீண்ட கூந்தல்

இந்த ஜூஸ் முக்கிய சத்துக்கள் நிறைந்தது மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பது. ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் பருகுவது தலைமுடி உதிர்வை தடுக்கிறது.

சருமத்தை நீர்ச்சத்துடன் இருக்க வைக்க உதவுகிறது

ஏபிசி ஜூஸ் வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் சருமத்தில் நீர்ச்சத்தை பராமரிக்கிறது. குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகிறது. ஆனால் ஒரு டம்ளர் ஏபிசி ஜூஸ், உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆப்பிளில் உள்ள அதிக நீர்ச்சத்து, சருமம் வறண்டு போவதில் இருந்து பாதுகாக்கிறது.

சரும பொலிவை அதிகரிக்கிறது

ஏபிசி ஜூஸ் சருமத்தில் பொலிவை ஏற்படுத்துகிறது. உங்கள் சருமம் முழுவதிலும் ஒரே பளபளப்பு மற்றும் பொலிவை பராமரிக்கிறது.

முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது

பீட்ரூட் சிறந்த கழிவு நீக்கியாகும். இது சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. பீட்ரூட் முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது.

கொலஜென் உற்பத்தி

கொலஜென் உற்பத்தி சருமம் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க உதவுகிறது. ஆப்பிள்கள் மற்றும் கேரட்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. அது கொலஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமம் பொலிவிழப்பதை ஏபிசி ஜூஸ் தடுக்கிறது.

கழிவு நீக்கம்

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் ஒரு கழிவு நீக்க பானம். இது உடலில் நச்சுப்பொருட்களை நீக்குகிறது. சருமத்தில் ஆழப்படிந்துள்ள மாசுக்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

பளபளக்கும் சருமம்

ஏபிசி ஜூஸ் சருமத்திற்கு இயற்கையிலேயே பொலிவையும், நிறத்தையும் கொடுக்கிறது.

சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு

கேரட்களில் பீட்டா கரோட்டின் சத்து நிறைந்துள்ளது. அது சூரியக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

அழற்சிக்கு எதிரானது

ஏபிசி ஜூஸில் அழற்சிக்கு எதிரான தன்மைகள் உள்ளன. இது சருமம் சிவத்தல் மற்றும் சருமத்தில் உள்ள எரிச்சல் ஆகியவற்றை போக்குகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *