Benefits of Kodo Millet : தினம் ஒரு தானியம் – நீரிழிவு முதல் மலச்சிக்கல் வரை உங்கள் உடலுக்கு வரகு தரும் நன்மைகள் என்ன?
100 கிராம் வரகில் 59.2 கிராம் கார்போஹைட்ரேட்கள், புரதம் 10.6 கிராம், நார்ச்சத்து 10.2 கிராம், கொழுப்பு 4.2 கிராம், பாஸ்பரஸ் 188 மில்லி கிராம், பொட்டாசியம் 107.8 மில்லி கிராம், கால்சியம் 27 மில்லி கிராம், சோடியம் 3.48 மில்லி கிராம், வைட்டமின் பி3 – 2 மில்லிகிராம், துத்தநாகம் 1.58 மில்லிகிராம், இரும்புச்சத்து 0.5 மில்லிகிராம், வைட்டமின் பி5 – 0.28 மில்லிகிராம், வைட்டமின் பி1 – 0.18 மில்லிகிராம், வைட்டமின் பி2 – 0.09 மில்லி கிராம், ஃபோலேட் 33.06 மைக்ரோகிராம், வைட்டமின் கே – 0.5 மைக்ரோகிராம் உள்ளது.
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது ரத்தச்சர்க்கரை அளவை குறைக்கிறது. ரத்த அழுத்தை குறைக்கிறது. அலர்ஜிக்கு எதிரான பொருட்கள் உள்ளது, செல்களின் அசாதாரண வளர்த்ச்சிகளை தடுக்கிறது, பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள் நிறைந்துள்ளது.
கொழுப்பை பராமரிப்பதில் உதவுகிறது
வரகு உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் கொழுப்பை பராமரிக்க உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாக்டீரியா தொற்றுகளை சரிசெய்கிறது
வரகு, பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராடும் தன்மைகொண்டது. வரகு, எஸ்.அரேயஸ், பேசிலஸ் சிரியஸ், லியூகோனோஸ்டாக் மெசண்டிராய்ட்ஸ் மற்றும் என்டரோகோகஸ் ஃபெகாலிஸ் ஆகிய பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதையில் வளர்வதை தடுக்கிறது. இது பாக்டீரியா தொற்றுக்களை குறைக்க உதவுகிறது என்பது ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு உதவும் வரகு
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன், ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் குறைவாக சுரக்கும்போது ஏற்படுவது டைப் 2 டையாபடீஸ் நோய். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வரகால் முடியும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
புற்றுநோயை கட்டுப்படுத்தும் வரகு
வரகு, புற்று நோய் ஆபத்தையும் குறைக்கிறது. புற்றுநோய் வருவது மற்றும் அதிகரிப்பதை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் உள்ள ஃபினோலிக் அமிலம், ஃபைட்டின் அமிலம் மற்றும் டனினிஸ் ஆகியவை கேன்சருக்கு எதிரான உட்பொருட்கள். எனவே இவை குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுக்கின்றன.
ஊட்டச்சத்து அதிகரிக்க உதவுகிறது
நமது உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அவை மூன்று வகைப்படும்
அதிக எடை
மைக்ரோ நியூட்டியன்ட் தொடர்பான ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைவு
வரகு, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. வரகில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மைக்ரோ நியூட்ரியன்ட் தொடர்பான ஊட்டச்சத்துக்கு உதவும். வரகு, சாப்பிடுவது ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வரகில் உள்ள பிற நன்மைகள்
ஆயுர்வேத மருத்துவத்தில் வரகு மூட்டு வலியை போக்க பயன்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யவும், இதில் உள்ள அதிக பொட்டாஷிய சத்து மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிறு வலியை குணப்படுத்துவும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் அதிகம் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சரிப்படுத்தி, மலச்சிக்கலை போக்கிறது.
வரகு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகிய இரண்டும் நாம் அதிகம் உட்கொள்வதை தடுக்கிறது.
வரகில் உள்ள புரதச்சத்து கொலஜென் என்று அழைக்கப்படுகிறது. இது சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. சருமத்தை காக்கிறது.
இதில் உள்ள ப்ரீபயோடிக் நார்ச்சத்துக்கள், குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.