Benefits of Walnuts : இதை மட்டும் ஊறவைத்து சாப்பிடுங்கள்! உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது!
Benefits of Walnuts : நீங்கள் ஊறவைத்த வால்நட்களை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
வால்நட்டின் ஓடு மிகவும் கடுமையானது. இதற்குள் இருக்கும் மூளை வடிவிலான பருப்பை சாப்பிட்டால் அது கொஞ்சம் இனிப்புடனும், கொஞ்சம் கசப்பு கலந்த சுவையுடையது. அந்த வால்நட்டை ஓரிவு ஊறவைத்து காலையில் உட்கொள்ள வேணடும். ஊறவைத்த வால்நட்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
இதயத்துக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
வால்நட்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அழற்சியை குறைக்கிறது. உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது
வால்நட்களில் பாலிஃபினால்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.
உடல் எடை குறைப்பு பயணத்தில் சேர்த்துக்கொள்ளலாம்
இதில் கலோரிகள் அதிகம் உள்ளது. இது நார்ச்சத்து நிறைந்துள்ளது. புரதச்சத்து அதிகம் உள்ளது. வால்நட்கள் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
வால்நட்கள் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகளை வழங்குகிறது.
அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது
வால்நட்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. அது அழற்சியுடன் தொடர்புடைய நீண்ட நாள் பிரச்னைகளை தடுக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வால்நட்களில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமானத்தை மேம்படுத்துகிறது. குடல் இயக்கத்தை பராமரிக்கிறது. குடல் நுண்ணுயிர் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சருமத்துக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது
வால்நட்களில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் வைட்டமின் இ ஆகியவை சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. சேதத்தை தடுக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.