தண்ணீர் தட்டுப்பாடால் திணறும் பெங்களூரு.. தீர்வு என்ன..?
கோடைக்காலத்துக்கு சில மாதங்களுக்கு முன்பே பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் தண்ணீர் வழங்க முடியாமல் தவிக்கின்றனர், இந்த நிலையில் பெங்களூருவில் புதிய வீடு வாங்குபவர்கள், பில்டர் அல்லது ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) மூலம் தண்ணீர் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு பெங்களூரை சேர்ந்த மூத்த இதயநோய் நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் வீடு வாங்குபவர்கள், கட்டட காண்ட்ராக்டர் / BBMP உடன் தண்ணீர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்த்ம மூலம் எல்லா நேரத்திலும், அடுத்த 99 ஆண்டுகளுக்கு பில்டர்/பிபிஎம்பி தண்ணீர் வழங்க வேண்டும்.
இல்லையெனில், விலையுயர்ந்த வீடுகளை வாங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை, என்று மாரத்தஹள்ளியில் உள்ள காவேரி மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி கூறினார். தற்போதுள்ள வீடுகள் உள்ள குடிமக்கள் அரசு போதுமான தண்ணீர் வழங்காவிட்டால், சொத்து வரி செலுத்துவதை நிறுத்த வேண்டும்.
ஏரி பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் வரம்பற்ற வளர்ச்சியில் கட்டுப்பாடு உள்ளது என்று டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறினார்.
பெரும்பாலான மக்கள் இதைச் செய்வதில்லை, இதனால் பின்னர் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், பில்டர்கள் தொடர்ச்சியான தண்ணீர் விநியோகம் உள்பட பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
பெங்களூரு முழுவதும் தண்ணீர் டேங்கர்கள் பைத்தியம் பிடித்தது போல் மக்கள் பதிவு செய்யப்படுகின்றனர் என்று விஷால் குமார் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1,000 வீடுகளுக்கு மேல் இருந்தால் ஒரு அப்பார்ட்மென்ட் வளாகத்தில் வீடு வாங்குவது அர்த்தமில்லை. வளங்களுக்குப் பெரும் பஞ்சம் ஏற்படும். ஒரு பில்டர் சமீபத்தில் 3,000 யூனிட்கள் கொண்ட வளாகத்தை கட்டினார். அங்கு வசிக்கும் மக்களுக்கு நீங்கள் எப்படி தண்ணீர் வழங்குவீர்கள்? என்று கணேஷ் பிரசாத் என்பவர் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் செவ்வாய்கிழமையன்று 24 மணி நேரத்துக்கு குடிநீர் சப்ளை நிறுத்தத்தை அறிவித்தது. அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், கணக்கிடப்படாத நீர் முறைப்படுத்தல், மொத்த ஓட்ட மீட்டர்களை நிறுவவும் இந்த சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக விளக்கம் தரப்பட்டது.
2023 இல் மிகக் குறைந்த அளவுக்கு பருவமழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. பெங்களூருக்கு தண்ணீர் தரும் காவிரி ஆற்றுப்படுகை நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்துடனான தண்ணீர் பிரச்னையால், நகரின் ஒரு நீர் ஆதாரம் முடங்கியுள்ளது.
1.3 கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூரு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் லாரிகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. தண்ணீர் டேங்கர் டீலர்கள் பெங்களூரின் சில பகுதிகளில் வசிப்பவர்களிடம் 12,000 லிட்டர் டேங்கருக்கு 2,000 ரூபாய் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்பு இது 1,200 ரூபாய் ஆக இருந்தது என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பே தண்ணீர் டேங்கர்களை முன்பதிவு செய்ய வேண்டும். என் செடிகள் காய்ந்து விட்டன என்று வடக்கு பெங்களூரில் உள்ள ஹோரமாவுவில் வசிக்கும் சந்தோஷ் கூறினார்.