பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு.. வீட்டு வாடகை குறைகிறதாம்..!!

இந்தியாவின் முக்கியமான மெட்ரோ நகரங்களில் ஒன்றான பெங்களூரில் கடந்த 2 வருடத்தில் வீட்டு வாடகை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, உதாரணமாக 10000 ரூபாய் வாடகை கொண்டு இருந்த பல வீடுகள் தற்போது 15000 முதல்ல 18000 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது.
அதுவும் பெரிய அப்பார்ட்மென்ட், கூடுதலான வசதி கொண்ட அப்பார்டமென்ட் ஆக இருந்தால் வாடகை அளவு 100 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இப்படியிருக்கும் நிலையில் தான் பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் வாடகையில் பெரிய ஓட்டை போட்டு உள்ளது.
பெங்களூரில் ஆர்ஆர் நகர், பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, தாசரஹள்ளி, எலஹங்கா பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் இருந்து பலர் வேறு பகுதிக்கு குடிப்பெயர துவங்கியுள்ளனர்.
இதனால் ஆர்ஆர் நகர், பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, தாசரஹள்ளி, எலஹங்கா பகுதிகளில் பல காலியான வீடுகளின் வாடகை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அடுத்த சில காலாண்டுகளுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் எப்படி மழை வெள்ளம் வந்த போது, மக்கள் வெள்ளம் புகாத இடங்களை தேடிப்பிடித்து இடத்தையும், வீட்டையும் வாங்கியனார்களோ, அதேபோல் தற்போது பெங்களூரில், மழை வெள்ளம் வந்தால் எங்கே தண்ணீர் தேங்குகிறது, தண்ணீர் பிரச்சனை எங்கு அதிகமாக இருக்கிறது என மக்கள் நோட் செய்து வருகின்றனர்.
அதனால் அடுத்த ஒருவருடத்தில் பெங்களூர் ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவில் மாற்றங்களை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.