கோடி ரூபாயில் பென்ஸ் காரை வாங்குவதற்கு பதில் இப்படியும் பண்ணலாமா! மஹிந்திரா கார் இதுனு சொன்னால் நம்ப முடிகிறதா
மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero) கார் ஒன்று, விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனமான ஜி-வேகன் போன்று கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ் பொலேரோ வாகனம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ள சுவாரஸ்யமான விஷயங்களை இனி பார்க்கலாம்.
மஹிந்திரா பொலேரோவுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு பிரபலமான மஹிந்திரா வாகனம் பொலேரோ ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அதிக பேர் வாங்கும் வாகனங்களுள் ஒன்றாக பொலேரோவை சொல்லலாம். நிறைய பேர் பொலேரோவை வாங்குவதற்கு மற்றொரு காரணம், இதனை தேவைக்கேற்ப கஸ்டமைஸ் செய்துக் கொள்வதும் எளியது.
நமது செய்தித்தளத்திலேயே நிறைய முறை கஸ்டமைஸ் செய்யப்பட்ட பொலேரோ கார்களை பற்றி பார்த்துள்ளோம். அந்த வரிசையில், கேரளாவில் பொலேரோ கார் ஒன்று ஆஃப்டர் மார்க்கெட் கஸ்டம் பாடி கிட்களுடன் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் போன்று மாற்றப்பட்டுள்ளது. பொலேரோ கார் ஒன்று ஜி-வேகன் வாகனம் போன்று மாற்றப்படுவது புதியது அல்ல.
கேரளாவிலும் நிறைய முறை இவ்வாறான கஸ்டமைஸ் பொலேரோ கார்களை பார்த்துள்ளோம். ஜி-வேகன் கார்களுக்காக பிராபஸ் கிட் விற்பனையில் உள்ளது. பிராபஸ் கிட் பொருத்தப்பட்ட ஜி-வேகன் தோற்றத்தில் சற்று வித்தியாசமானதாகவும், கூடுதல் முரட்டுத்தனமானதாகவும் இருக்கும். கிட்டத்தட்ட அதேபோன்றுதான் இந்த கஸ்டமைஸ் பொலேரோ காரும் உள்ளது.
இந்த கஸ்டமைஸ் பொலேரோ கார் தொடர்பான இன்னும் சில வீடியோக்களையும் இணையத்தில் காண முடியும். இந்த வீடியோக்களில், முற்றிலும் கருப்பு நிறத்திலான மஹிந்திரா பொலேரோ காரை காணலாம். ஆனால், இது பொலேரோ கார் என்பதை நிச்சயமாக நிறைய பேரால் உடனடியாக அடையாளம் காண முடியாது. அந்த அளவிற்கு நேர்த்தியாக இந்த குறிப்பிட்ட பொலேரோ கார் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதற்கேற்ப, மெர்சிடிஸ் நிறுவனத்தின் லோகோ இந்த கஸ்டமைஸ்ட் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பொலேரோ காரின் முன்பக்கம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதாவது, முன்பக்க கிரில், பம்பர், ஹெட்லேம்ப்கள், ஃபெண்டர்கள் மற்றும் பொனெட் உள்ளிட்டவை ஆஃப்டர் மார்க்கெட் பாகங்களினால் மாற்றப்பட்டுள்ளன.
பொலேரோவில் முன்பக்க பம்பருக்கு கீழே வழங்கப்படும் மெஷ் கிரில் கூட வேறொரு கிரில் சிஸ்டத்தினால் மாற்றப்பட்டுள்ளது. ஜி-வேகன் வாகனத்தில் வழங்கப்படுவதை போன்று, இந்த கஸ்டமைஸ் பொலேரோவின் ஃபெண்டர்களில் டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த பொலேரோ காரின் அகலம் அதிகமாகி உள்ளது.
இருப்பினும், வாகனத்தின் சைடு பகுதி வழக்கமான பொலேரோவையே ஞாபகப்படுத்துகிறது. ஏனெனில், ரூஃப், விண்ட்ஸ்க்ரீன், ORVM-கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக, ஜி-வேகன் நன்கு உயரமானது. ஆனால், பொலேரோ சற்று உயரம் குறைவானதே ஆகும். பொலேரோ கார்களின் சைடு படிக்கட்டுகள் காரின் ஃபெண்டர்களுடன் இணைவது போல் வழங்கப்படுகின்றன. ஆனால், ஜி-வேகனில் அவ்வாறு இருக்காது.
View this post on Instagram