பாக்யராஜ் வில்லனாக நடித்த படம்… கையில் கிடைத்தால் கசாப் போட நினைத்த ரசிகர்கள்

பாக்யராஜ் நடித்த படங்கள் என்றாலே அவை தாய்மார்களைப் பெரிதும் கவர்வதாகவே இருக்கும். அவர் எல்லாப் படங்களிலும் ஹீரோவாகவே நடிப்பார். ஆனால் தப்பித்தவறி கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் வில்லனாக நடித்து விட்டார். படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டு கண்டம் துண்டமாக வெட்ட நினைத்தார்களாம். கதை, திரைக்கதை வசனம் எழுதியவர் பாக்யராஜ் தான். சங்கர் கணேஷ் இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தின் கதை இதுதான்.

ராஜேஷ் மஞ்சுவிரட்டில் காளையை அடக்குவார். அவரிடம் மனதைப் பறிகொடுக்கிறார் வடிவுக்கரசி. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். முதலிரவின்போது ராஜேஷ் மனைவியிடம் நெருங்குகிறார். ஆனால் அவளுக்கோ நெஞ்சுவலி வருகிறது. டாக்டரிடம் சென்று பார்த்தால், மாடு முட்டியதால் தான் இந்த விளைவு என்கிறார். மேலும் மனைவியிடம் சேராமல் இருப்பது தான் நல்லது என்கிறார்.இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்த நிலையில் ராஜேஷின் நண்பராக வரும் பாக்யராஜ் ஊரிலிருந்து கிராமத்திற்கு வருகிறார். நண்பனின் மனைவி என்ற முறையில் வடிவுக்கரசியிடம் பழகுகிறார். ஒரு முறை ஒரு சம்பவத்தால் இருவரும் கட்டிப்பிடிக்கும் நிலை உண்டாகிவிடுகிறது. அதில் இருந்து பாக்யராஜ் வடிவுக்கரசி மீது சபலம் கொண்டு அவரை அடைய நினைக்கிறார்.

அதே நிலையில் ராஜேஷ் ஆண்மை இல்லாதவர் என்று தெரிந்து விடுகிறது. பாக்யராஜ் இதை வைத்து வடிவுக்கரசியை டார்ச்சர் செய்கிறார். மறுபக்கம் இன்னொரு திருமணம் செய்து கொள் என்கிறார் ராஜேஷ். கதை இப்படி போகிறது. வடிவுக்கரசி என்ன செய்கிறார் என்பது தான் கதை.

பட்டுவண்ண ரோசாவாம், நடைய மாத்து, ஆவாரம் பூமணி ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட்டானவை. படத்தில் பாக்யராஜ் நெகடிவ் ரோலில் நடித்தாலும் 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்று விட்டது. படத்தில் ராஜேஷின் நடிப்பு அபாரமானது. எஸ்.ஏ.ராஜ்கண்ணு இந்தப் படத்தைத் தயாரித்தார். பாலகுரு இயக்கினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *