Bhanupriya: புறக்கணிப்பு.. நோய்.. கணவர் இழப்பு.. தெருவில் நிறுத்திய குடும்பம்.. பானுப்பிரியாவின் சோகப்பக்கம்!

பானுப்பிரியா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.

 

இது குறித்து அவர் பேசும் போது, ” ஆந்திர மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் பானுப்பிரியா. இவருக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள்.

பானுவின் உண்மையான பெயர் மங்கம்மா. அவருக்கு முதல் தமிழ் படம் பெரிதாக கிளிக் ஆகாத நிலையில், தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார். அதற்கு பலன் கிடைத்தது.

ஒரு கட்டத்தில் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கி விட்டார். அதன் பின்னர் நாட்கள் ஓட, அவருக்கு நினைவாற்றல் சம்பந்தமான பிரச்சினை வந்துவிட்டது.

குறிப்பாக ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் வசனங்களை சொல்லும் பொழுது, அவரால் முன்பு போல சரளமாக பேச முடியவில்லை. இதனை சரியாக புரிந்து கொண்ட அந்த படத்தின் இயக்குநர் கேமராவின் பின்னால் இருந்து வசனங்களை சொல்லச் சொல்ல, பானு அதனை பேசினார்.

அது அவருக்கு மிகவும் ஒரு குற்ற உணர்வை கொடுத்தது. இதனையடுத்து அவர் மொத்தமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்து இருக்கிறார்.

பானுப்பிரியாவுக்கு 1998-ல் திருமணம் நடந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய கணவர் இடையிலேயே இறந்து போகிறார். இதனையடுத்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. மீண்டும் நடிப்பதற்கு வருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *