இனி ஊருக்கு ஊரு வந்தே பாரத் ஓடும்! 40,000 பெட்டிகளை வந்தே பாரத் பெட்டியாக மாற்ற முடிவு!

இன்று பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கலான நிலையில் ரயில்வே தொழில்நுட்பம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் பிரபலமாகியுள்ள நிலையில் அடுத்ததாக சாதாரண ரயில்களை வந்தே பாரத் தரத்திற்கு உயர்த்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இந்தியாவில் அடுத்த நான்கு மாதங்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறை குறித்த முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் பிரபலமாகி வருகிறது.
சாதாரண ரயிலில் இருந்து வந்தே பாரத் ரயில் பல்வேறு வசதிகள் மற்றும் சொகுசு அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க விரும்பி வருகின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகம் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் பல ஊர் மக்கள் வந்தே பாரத் ரயிலை தங்கள் ஊருக்கு இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் தற்போது இந்தியாவில் இயங்கி வரும் 40,000 ரயில் பெட்டிகளை வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட்டில் வந்தே பாரத் ரயில் குறித்து சில அறிவிப்புகள் வெளியாகும் என்றும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில்கள் எல்லாம் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் அதிகம் இருந்து வந்தன.
இது இடைக்கால பட்ஜெட் என்பதால் மிகப்பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் மிக முக்கியமான அறிவிப்பாக இந்த 40,000 ரயில் பெட்டிகளை வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான ரயில்கள் தரம் உயர்த்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே வந்தே பாரத் ரயிலில் சாதரன் என்ற சாதாரன வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படியாக சாதரன் ரயில் பயன்பாட்டிற்காக சாதாரன ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இதனால் ரயிலின் எடை குறைக்கப்பட்டு அதே நேரம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் ரயிலில் உள்ளே உள்ள வசதிகள் அதிகரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இப்படியாக செய்யும் போது அந்த ரயில் வழக்கத்தை விட வேகமாக பயணிக்கும் திறன் கொண்ட ரயிலாக மாறும். இதனால் ரயிலின் பயண நேரம் என்பது குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து இந்தியாவில் ரயில் தயாரிப்பு என்பது மேம்பட்டு கொண்டே வருவதால் இப்படியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இந்தியாவில் வருங்காலத்தில் ரயில் போக்குவரத்து அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவியாக இருக்கும்.
வந்தே சாதரன் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் தற்போது ஏற்கனவே இயங்கி வரும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களுக்கு பதிலாக இந்த வந்தே சாதரன் ரயில்கள் கொண்டுவரப்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி செய்தால் இரவு நேரங்களில் பயணிக்கும் ரயில்களின் பயண நேரம் வெகுவாக குறையும். இது மக்கள் பலருக்கு உதவியாக இருக்கும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு தற்போது இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள இந்த வந்தை பாரத் ரயில் குறித்து அறிவிப்பு மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் இது அமலுக்கு வரும்போது நிச்சயம் தமிழகத்திற்கும் பலன் உள்ளதாக இருக்கும். இது எப்பொழுது அமல்படுத்தப்படும் என்ற தகவல்கள் எல்லாம் பின்னர் தெரிவிக்கப்படும்.