மேடையில் கதறி அழுத பவதாரிணி… தேற்றி பாட வைத்த இளையராஜா… வைரலாகும் பழைய வீடியோ!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் கடந்த வியாழன் அன்று காலமானார். 47 வயதில் அவர் உயிரிழந்திருப்பது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரணி அதற்காக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதற்கு திரைத்துறையினர் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மிகவும் இனிமையான குரல் வளம் கொண்ட பவதாரணி, தந்தையை போலவே பாடுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். பாரதி திரைப்படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடல் தேசிய விருதை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

பவதாரணி விளம்பர நிர்வாகி சபரி ராஜ் என்பவரை திருமணம் செய்தார். இருப்பினும் அவரை விட்டு பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் உயிர் பிரிந்திருப்பது இளையராஜா சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக இளம் வயதில் பவதாரணி ஒரு மேடையில் பாடினார். அப்போது என்ன காரணம் என்று தெரியவில்லை, ஆனால் அவர் மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதார், அந்த நேரத்தில் இளையராஜா பவதாரணி தேற்றி மீண்டும் பாட வைத்தார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது, இவ்வளவு இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் வெகு சீக்கிரத்திலேயே உலகை விட்டு பிரிந்து விட்டார் என்று ரசிகர்கள் வேதனையை இணையதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *