Bhavatharini : பவதாரிணி உயிரிழப்பு.. இறுதி சடங்கு எப்போது?

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகிமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையும் பலராக வலம் வரும் இளையராஜாவின் மகள் பவதாரிணி. இவர் 1976 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்தார். பவதாரிணி என பெயர் சூட்டப்பட்ட இவர், 1984 ஆம் ஆண்டு வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் பாடியிருந்தார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். குறிப்பாக பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக தேசிய விருது வென்றார்.

இதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ் உள்ளிட்ட பலரின் இசையிலும் பின்னணி பாடல் பாடியுள்ளார். அத்துடன் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 10 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் பவதாரிணிக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதற்கான சிகிச்சை கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் சமீபத்தில் இலங்கைக்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி தன்னுடைய 47வது வயதில் பவதாரிணி உயிரிழந்தார். இவர் முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜனின் அக்கா உறவினரை திருமணம் செய்திருந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. இலங்கையில் உயிரிழந்த பவதாரணியின் உடல் நாளை (26.01.2024) சென்னை எடுத்து வரப்படுகிறது. அதன்பிறகு இறுதி சடங்குகள் நடைபெறவிருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *