Bhavatharini: திட்டு வாங்கிக்கிட்டுதான் பாடினேன்..முதல் பாடல் அனுபவம் பகிர்ந்த பவதாரிணி பழைய பேட்டி!

சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இலங்கையில் உயிரிழந்தார்.

அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு தேனியில் இளையராஜாவின் பண்ணைபுரம் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பவதாரிணி குறித்து பகிர்ந்துக் கொள்ள அதிகமான விஷயங்கள் இருந்த போதிலும் அவரது தனிப்பட்ட குரலால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டதை குறிப்பாக சுட்டிக் காட்டலாம். அவர் அதிகமாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்கள் இசையில் பாடியுள்ளார்.

பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் பவதாரிணி. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பவதாரிணிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கீமோதெரபிக்கு அவரது உடல் ஒத்துழைக்காத நிலையில் அவருக்கு இலங்கையில் வைத்து ஆயுர்வேத சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் பவதாரிணியை அங்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் கடந்த இரு தினங்களக்கு முன்பு இலங்கை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் கோலிவுட்டில் அதிகப்படியான அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா மகள் பவதாரிணி: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மரணம் கோலிவுட்டில் அதிகப்படியான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்தார் பவதாரிணி. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் கோலிவுட்டில் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழில் தன்னுடைய அப்பா இளையராஜா மற்றும் சகோதரர்கள் இசையில் பாடல்களை பாடி வந்தார் பவதாரிணி. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் அவர் பாடல் பாடியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *