எலோன் மஸ்க்கிற்கு விழுந்த பெரும் அடி., உலக பணக்காரர்கள் பட்டியலை புரட்டிப்போட்ட மாற்றங்கள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலோன் மஸ்க் (Elon Musk) பெரும் சரிவை சந்தித்துள்ளார்.

டெஸ்லாவில் அவரது தனிப்பட்ட செல்வம் கடந்த இரண்டு மாதங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால் மஸ்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் 40 பில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.12 லட்சம் கோடி) குறைந்தது.

Bloomberg Billionaires Index-ன் படி, உலகின் பணக்காரர்களின் பட்டியலில் எலோன் மஸ்க் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

கடந்த 2 மாதங்களில் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள்
ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, எலோன் மஸ்க் தற்போது 189 பில்லியன் டொலர் சொத்துமதிப்பைக் கொண்டுள்ளார்.

பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 201 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) 198 பில்லியன் டொலர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் எலோன் மஸ்க்கிற்குப் பிறகு, Meta-வின் தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) 182 பில்லியன் டொலர்களுடன் நான்காவது இடத்தில் தொடர்கிறார்.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து 53.5 பில்லியன் அதிகரித்துள்ளது.

Elon Musk சரிவிற்கு காரணம் என்ன?
மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான Tesla-வின் பங்குகள் எலோன் மஸ்க்கின் முக்கிய வருமான ஆதாரமாகும்.

சீனாவில் இந்நிறுவனத்தின் விற்பனை நம்பிக்கை அளிக்காத வகையில், பெர்லின் அருகே உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை தாக்கப்பட்டு கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் டெஸ்லா பங்குகள் 29 சதவீதம் சரிந்துள்ளன. டெஸ்லாவின் பங்கு மதிப்பு அதன் 2021 உச்சத்திலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக இழந்துள்ளது.

இது தவிர, டெஸ்லாவின் இயக்குநர்கள் குழுவால் தீர்மானிக்கப்பட்ட 55 பில்லியன் டொலர் சம்பளத் தொகுப்பிற்கு எலோன் மஸ்க் தகுதியற்றவர் என்று டெலாவேர் நீதிமன்றத் தீர்ப்பும் அவரது செல்வம் குறைவதற்கு மற்றொரு காரணம் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *