#BIG NEWS : கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
2021,டிசம்பர் 19-ம் தேதியன்று பா.ஜ.க. OBC Morcha பிரிவின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ரஞ்சித் சீனிவாசன் வீட்டில் நுழைந்த 15 பேர் அவரை கொடூரமான முறையில் படுகொலை செய்தனார்.
வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்முன்னே இந்த கொடூர கொலை என்பது நடந்தது. இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ரஞ்சித் சீனிவாசன் கொலையானது எஸ்டிபிஐவை சேர்ந்த கேஎஸ் ஷான் என்பவர் கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில் நடந்தது. இதனால் ரஞ்சித் சீனிவாசன் கொலைக்கும், கேஎஸ் ஷான் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த விசாரணையின்போது ரஞ்சித் சீனிவாசன் கொலை தொடர்பாக நிஜாம், அஜ்மல், அனூப், எம்டி அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப், நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி மற்றும் ஷாம்னாஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேரு நேரடியாக தொடர்பு இருப்பது நிரூப்பிக்கப்பட்டள்ளது; 3 பேர் கொலைக்கு உதவியாக இருந்ததும் உண்மை.
இந்த வழக்கு என்பது ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதான 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.