#BIG NEWS : கனிமொழி, ஆ.ராசாக்கு ஷாக்..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.

இதன் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக ஆ. ராாச மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதன் அடிப்படையில்தான் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்னர். பின்னர் அனைவருமே ஜாமீனில் விடுதலையாகினர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் இல்லை என 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனியின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

2ஜி வழக்கில் இருந்து திமுக மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தினேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், மே மாதம் முதல் இந்த ‘2ஜி வழக்கு’ மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *