பிரித்தானியாவுக்கு பெரும் தலைக்குனிவு: அணு ஆயுத சோதனை மீண்டும் தோல்வி

சமீபத்தில் பிரித்தானியா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியானதுமே, அது வெற்றி பெற்றாக வேண்டும், இல்லையானால் பிரித்தானியாவுக்கு அவமானம் ஏற்படும் என்று கூறியிருந்தார், பக்கிங்காம் பல்கலை பேராசிரியரான Anthony Glees என்பவர்.
பிரித்தானியாவுக்கு பெரும் தலைக்குனிவு…
இப்போது உலக அரங்கில் அந்த அணு ஆயுத சோதனை பிரித்தானியாவுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அந்த அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்துள்ளது!
பிரித்தானிய கடற்படையிலுள்ள HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து, Trident 2 என்னும் அந்த அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்ட நிலையில், அந்த ஏவுகணை சிறிது தூரத்திலேயே கடலில் விழுந்துவிட்டது.
மீண்டும் தோல்வி!
2016ஆம் ஆண்டு, இதேபோல ஒரு அணு ஆயுத சோதனையை பிரித்தானியா நடத்த, அது தோல்வியில் முடிந்தது. ஆகவே, இரண்டாவது முறை அந்த சோதனையைஅ பிரித்தானியா நடத்தும்போது எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்று கூறியிருந்தார் பக்கிங்காம் பல்கலை பேராசிரியரான Anthony Glees என்பவர்.
அத்துடன், பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை வெற்றிபெற்றால், ரஷ்ய ஜனாதிபதி புடின் அது குறித்து பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளமாட்டார் என்று கூறிய பேராசிரியர் Anthony Glees, அதே நேரத்தில், அந்த சோதனை 2016ஆம் ஆண்டு நடந்ததைபோல தோல்வியில் முடிந்ததானால் அவ்வளவுதான், புடின் சத்தமாக சிரிக்கப்போகிறார். அதனால், கிரெம்ளின் மாளிகையே அதிரப்போகிறது என்று கூறியிருந்தார். ஆகவே, இந்த முறையாவது சொதப்பாமல் ஒழுங்காக அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார் பேராசிரியர் Anthony Glees.
பிரித்தானிய ராணுவத்தின் நிலைமை
உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததிலிருந்தே, அவர் எந்த நாட்டை வேண்டுமானாலும் தாக்கலாம் என்னும் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், போர் உருவாகுமானால், அதை எதிர்கொள்ள பிரித்தானிய ராணுவம் தயாராக எல்லை என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேபோல, போர் ஏற்படுமானால், பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும், ஏனென்றால், பிரித்தானிய ராணுவம் மிகவும் சிறியதாக உள்ளது என்று பிரித்தானிய படைகளின் தலைவரான General Sir Patrick Saunders கூறியதாக ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
மேலும், பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான Tobias Ellwood என்பவரும், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்னும் ஒரு சூழலில் நாம் வாழ்ந்துவருகிறோம். பனிப்போர்க் காலத்துக்குப் பின் நமது ராணுவம் முன்னிருந்த நிலையில் இல்லை. அது மிகவும் சுருங்கியிருக்கிறது. ஆகவே, நாம் நமது ராணுவத்தை போருக்கு தயார் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளதால், உலக அரங்கில் அந்த அணு ஆயுத சோதனை பிரித்தானியாவுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.