Bigg Boss 7 Tamil: நெருங்கும் கிளைமாக்ஸ்.. டபுள் எவிக்ஷனில் கை வைத்த பிக்பாஸ்.. – வெளியேறியது யார் யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. விக்ரம் சென்ற பின்னர் வீட்டினுள் உள்ள அனைவரும் பலமான போட்டியாளர்கள் என்பதால், போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துக்கொண்டிருக்கிறது.
இந்த வார எலிமினேஷன் பட்டியலில் தினேஷ், மாயா, நிக்சன், ரவீனா, மணி, விஜய் வர்மா ஆகியோர் இருந்தனர். இதில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்த நிலையில், பெரிய குண்டாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன் படி இருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்களாம். அவர்கள் வேறு யாருமில்லை ரவீனாவும், நிக்சனும்தானாம்.
முன்னதாக இதே போல பிக்பாஸ் வீட்டினுள் டபுள் எவிக்ஷன் நடந்தது. அதில் அக்ஷயாவும், பிராவோவும் ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டனர்.
நிக்சனை பொருத்த வரை, முதலில் இருந்தே பலமான போட்டியாளராக வலம் வரும் அவர் சக போட்டியாளராக இருந்து வெளியேற்றப்பட்ட ஐஷூவிடம் நெருங்கி பழகினார். இது பரபரப்பாக பேசப்பட்டது.
அதே போல ரவீனாவும் சக போட்டியாளர் மணியுடன் நட்பு பாராட்டி வந்தார். குறிப்பாக இருவரும் ஒன்றாக இணைந்து இருப்பதால், இருவருக்கு உரித்தான தனிப்பட்ட திறமைவெளிப்படவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது!