Bigg Boss 7 Tamil : நிக்சன் வெளியே வந்ததும் சந்தித்த நபர்கள் யார் தெரியுமா? போட்டோஸ் வைரல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே வந்த நிக்சன் ஜோவிகா, விக்ரம் ஆகியோரை சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர்.
இதை தொடர்ந்து முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் நடத்தப்பட்டு அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து முதல் வாரத்திலேயே எழுத்தாளர் பவா செல்லதுரையும் உடல் நல பிரச்சனை காரணமாக வெளியேறுவதாக அறிவித்தார்.
அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் மக்களின் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்தபோது அதிரடியாக அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்ன பாரதி, ஆகிய ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே நுழைந்தனர். வந்த ஒரு வாரத்தில் அன்ன பாரதி வெளியேறினார். பின்னர் கானா பாலா வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியானது.
வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் இந்த பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே இருந்த விஜய் வர்மா அனன்யா உள்ளே நுழைந்தனர். புதிய போட்டியாளர்கள் வந்துள்ளதால் யார் எவிக்ட் ஆவார்கள் என ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்த நிலையில் அக்ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து, வெளியேற்றப்பட்டனர்.
அதனைதொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் ஜோவிகா விஜயகுமார், கூல் சுரேஷ், அனன்யா ராவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். பின்னர் கடந்தவாரம் விக்ரம் சென்ற பின்னர் இந்தவாரம் ரவீனாவும் நிக்சனும் அடுத்தடுத்து டபுள் எவிக்சனில் வெளியேறினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட அதன் கிளைமாக்ஸை நெருங்கி விட்டது. நேற்று முன்தினம் தினம் குறைவான வாக்குகளை பெற்றதின் அடிப்படையில் ரவீனாவும், நிக்சனும் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வெளியே வந்த நிக்சன் ஜோவிகா, விக்ரம் ஆகியோரை சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் நட்பு, Friendship என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்து பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.