பிக்பாஸ் அர்ச்சனாவின் போட்டோஷூட்..!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எதை தேர்வு செய்வது என்பதை புத்திசாலித்தனமாக நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்து புதிதாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பே அவர்தான் டைட்டில் வின்னர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அர்ச்சனா தற்போது தனது வழக்கமான பணிகளை தொடங்கியுள்ளார். குறிப்பாக அவர் அட்டகாசமான காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து அதில் ‘வெறுப்பை சுமப்பது கடினம், ஆனால் அதே நேரத்தில் அன்பை சுமப்பது மிக எளிது. ஆகவே நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக முடிவு செய்து அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.