பிக்பாஸ் பிரபலம் நடிக்கும் புதிய சீரியல் ‘நினைத்தேன் வந்தாய்.’! மாற்றப்படும் ஜீ தமிழ் தொடர்களின் நேரம்!

தை பிறந்தால் வழி பிறக்கும், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்பது போல ஜீ தமிழ் சீரியல்களிலும் அதிரடியான மாற்றங்களுடன் அனைத்து தொடர்களும் புத்துயிர் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் நினைத்தேன் வந்தாய் என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடிக்க, கீர்த்தனா பொட்வால் கணேஷின் முதல் மனைவியாகவும் ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராமின் குழந்தைகளாக கனிஷ்கா, கௌஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடிக்க மேலும் பல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர். மனைவியை இழந்த எழில் ( கணேஷ் வெங்கட்ராம் ) தனது 4 குழந்தைகளை வளர்க்க தடுமாறுகிறார், இந்த நிலையில் சுடர் ( ஜாஸ்மின் ) என்ற பெண் அவனது வாழ்க்கைக்குள் வர அதன் பிறகு நடக்க போவது என்ன? சுடர் 4 பிள்ளைகளின் மனங்களை கொள்ளை கொண்டு அவர்களுக்கு தாயாக மாறுவாளா? இல்லையா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சீரியலால் சில சீரியல்களின் ஒளிபரபப்பு நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க. அதாவது தற்போது வரை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியல் இனி வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அதோடு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. புதிய நேர மாற்றங்களுடன் புத்துணர்ச்சி பெறும் உங்கள் அபிமான தொடர்களுடன் நினைத்தேன் வந்தாய் சீரியலையும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *