பிக் பாஸ் சீசன் 7: ச்சீ.. த்தூனு இருக்கு.. அர்ச்சனா ஜெயித்ததை ஏத்துக்கவே முடியல.. வனிதா ஆதங்கம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வி.ஜே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதை என்னால ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று நடிகை வனிதா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். மாயாவுக்கு மூன்றாவது இடம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்த மேடையில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் ஜெயித்துவிட்டது என்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது. இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கினார். இரண்டாம் இடத்தை மணியும் மூன்றாம் இடத்தை மாயாவும் பிடித்தார். அதேபோல, வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே வந்த தினேஷ், இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வதற்கான டிக்கெட்டை வென்ற விஷ்ணுவும் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்தனர்.
வெற்றியாளருக்கான கோப்பையை கமல்ஹாசன் வழங்கினார். வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே வந்த போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் சீசனில் கோப்பையை வெல்வது இதுவே முதன்முறையாகும். டைட்டிலை வென்ற அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலையும், 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து பேசிய அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பேன் என நினைத்திருந்தேன். இத்தனை நாட்கள் இருப்பேன் என்று நினைக்கவே இல்லை. எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
கடுப்பான வனிதா: இந்நிலையில், பிக் பாஸ் விமர்சகரான வனிதா விஜயகுமார், அர்ச்சனா வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், மருதநாயகம் தோற்றுவிட்டார், மேலும், அந்த மேடையில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் ஜெயித்துவிட்டது. மாயாவுக்கு மூன்றாவது இடம் மணி, அர்ச்சனா என்று நினைக்கும் போது ச்சீ..த்தூ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. கமல், அர்ச்சனாவின் கையை தூக்கும் போதே நான் வெளியில் வந்துவிட்டேன்.
கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா: இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ப்ரோமோஷன்களின் வழியாகவே அர்ச்சனா இந்த டைட்டிலை வென்றுள்ளார். ஆனால், இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்கள் அர்ச்சனா வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா இப்படியா செய்வாங்க என்று நடிகை வனிதா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.