பிக் பாஸ் நிகழ்ச்சி.. வெற்றி கோப்பையோடு சென்று “ஆசிரியரை” சந்தித்த VJ அர்ச்சனா – இன்ஸ்டா போஸ்ட் வைரல்!

சின்னத்திரை வரலாற்றில் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று ஒரு தனி மவுசு எப்பொழுதும் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய மொழிகள் பலவற்றில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழிலும் துவங்கியது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் நஃபீஸ் என்பவர் தான் டைட்டில் வின்னர் ஆக மாறினார்.
அதை தொடர்ந்து இரண்டாவது சீசனில் பிரபல நடிகை ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வின்னராக மாறியது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் கடந்த நான்கு சீசன்களாக ஆண் போட்டியாளர் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மாறிவந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் பிரபல சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா டைட்டில் வின்னராக மாறி உள்ளார்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தனது ஆசான் பிரவீன் அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். பிரவீன் என்பவர் சின்னத்திரை நாடகங்களின் இயக்குனராக திகழ்ந்து வருகிறார். சரவணன் மீனாட்சி போன்ற முக்கியமான தொடர்களை இவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பாடம் பயின்று இன்று மிகப்பெரிய இடத்தை அடைந்திருக்கும் அர்ச்சனா தனது ஆசிரியருக்கு நன்றி கூறி அந்த பதிவை வெளியிட்டிருக்கிறார்.