Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ரவீனா குடும்பத்தினர்… என்ன காரணம் தெரியுமா?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர்கள் அர்சனா, தினேஷ், கானா பாடகர் பாலா, ஆர்.ஜே.பிராவோ, பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி என 5 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 26-ம் தேதி பிக்பாஸ் வீட்டிலிருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டனர்.

முதலாவதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து பவா செல்லதுரை தாமாக முன்வந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக கூறி வெளியே சென்றுவிட்டார். பின்னர் விஜய் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து அடுத்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா என வீட்டிலிருந்து இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் 5-வது வாரம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்த நிலையில் அன்ன பாரதி எவிக்ட் செய்யப்பட்டார். ஆறாவது வாரம் ஐஷூவும் 7-வது வாரம் கானா பாலாவும் 8-வது வாரம் ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்‌ஷயா என பிக்பாஸ் வீட்டிலிருந்து 2 பேர் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் கடந்த 9-வது வாரம் ஜோவிகா எவிக்ட் செய்யப்பட்டார். 10-வது வாரம் மிக்ஜாங் புயல் கார்ணமாக ஓட்டிங் சரியாக நடிபெறவில்லை என்ற காரணத்தினால் நோ எவிக்‌ஷன் என்று பிக்பாஸ் குழு அறிவித்தது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத விதமாக மிட்வீக் எவிக்‌ஷன் நடைபெற்றது. இதில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா வீட்டில் இருந்து வெளியேற்றப்பற்றார். அதனைத் தொடர்ந்து வார இறுதியில் கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

12-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் யாரும் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் யார் செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களே முடிவு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதன் அடிப்படையில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பூர்ணிமா, நிக்ஸன், மாயா, விஜய், அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போட்டியாளர்களின் குடும்பத்தில் இருந்து அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 81-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரவீனாவின் குடும்பத்தினர் வெளியில் நடந்த சம்பவத்தை பேசியதாலும், கோட் வேர்ட் மூலம் பேசியதாலும் அவர்களை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இது அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *