பக்கிங்ஹாம் அரண்மனையை விட பெரியது! உலகின் மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் இந்திய பெண்: அவர் யார்?

குஜராத்தில் கம்பீரமாக நிற்கும் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய தனி குடியிருப்பு என்ற பெருமையை கொண்டுள்ளது.

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை
குஜராத்தில் உள்ள வதோதராவின் மையப்பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை(Laxmi Vilas Palace), உலகின் மிகப்பெரிய தனி குடியிருப்பு என்ற பெருமையை கொண்டுள்ள ஓர் கட்டிடக்கலை அதிசயம்.

1880 களில் மகாராஜா சாயாஜிராவ் கெயிக்வாட் III(Maharaja Sayajirao Gaekwad III) ஆல் கட்டப்பட்ட இந்த மாட்சிமைமிக்க அரண்மனை, வெறும் இல்லம் மட்டுமல்ல, பரோடாவை ஆண்ட கெயிக்வாட் வம்சத்தின் கம்பீரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் சான்றாக திகழ்கிறது.

இந்தோ-சாரசெனிக் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட லக்ஷ்மி விலாஸ் அரண்மனை, இந்திய மற்றும் ஐரோப்பிய கலை பாணிகளின் அதிசய கலவையைக் கொண்டுள்ளது.

சிக்கலான செதுக்கல்களாலும் பல வண்ண மர்மத்தாலும் அலங்கரிக்கப்பட்ட அதன் கம்பீரமான கட்டமைப்பு, பார்க்க வேண்டிய காட்சியாகும். அரண்மனையில் 170 க்கும் மேற்பட்ட அறைகள் இருப்பதாக கூறப்படுகிறது, ஒவ்வொரு அறையும் அற்புதமான கலைப் பொக்கிஷங்களும், தளவாடங்களாலும் நிறைந்துள்ளது.

கெயிக்வாட் வம்சத்தினர் இன்றும் அரண்மனையின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர், மேலும் அவர்களின் பாரம்பரியத்தை கவனமாக பாதுகாத்து வருகின்றனர்.

500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அரண்மனை வளாகம், கவனமாக பராமரிக்கப்படும் தோட்டங்கள், மலர் சோலைகள், மற்றும் ஒரு கோல்ஃப் மைதானத்தையும் கொண்டுள்ளது!

பக்கிங்காம் அரண்மனையை விட பெரியது!
Housing.com இன் அறிக்கையின்படி, லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 3,04,92,000 சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தின் பக்கிங்ஹாம் அரண்மனை(Buckingham Palace) 828,821 சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது.

ரூ.15,000 கோடிக்கு உலகின் விலையுயர்ந்த குடியிருப்பை கொண்டுள்ள முகேஷ் அம்பானியின் Antilia குடியிருப்பு(Ambani’s luxurious Mumbai residence Antilia) 48,780 சதுர அடியில் பரவியுள்ளது.

இதன் மூலம் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை பக்கிங்ஹாம் அரண்மனையை விடவும் நான்கு மடங்கு பெரியது, மேலும் அம்பானியின் விலையுயர்ந்த Antilia குடியிருப்பை விடவும் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

1890 களில் லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் கட்டுமான செலவு சுமார் £180,000 (₹27,00,000) ஆகும். கோல்ஃப் மைதானமும்(golf) லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் உள்ளது.

அரச தலைமுறை ரதிகராஜே கெய்க்வாட்
கெயிக்வாட் வம்சத்தின் அரச தலைமுறையாக தற்போது ரதிகராஜே கெய்க்வாட் (Radhikaraje Gaekwad) உள்ளார். ஜூலை 19, 1978 இல் பிறந்த இவர், வாசிப்பதிலும் எழுதுவதிலும் விருப்பமுள்ளவர்.

அத்துடன் இந்திய வரலாற்றில்(Indian History ) முதுகலைப் பட்டத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில்(Lady Shri Ram College of Delhi University) பெற்று செய்தியாளராகவும்(journalist) பணியாற்றியுள்ளார்.

இவரது தந்தை எம்.கே.ரஞ்சித்சிங் ஜாலா (Dr MK Ranjitsinh Jhala) IAS அதிகாரியாக ஆவதற்காக தன்னுடைய அரச பட்டத்தை துறந்தார்.

2002 -ல் ரதிகராஜே கெய்க்வாட்டை திருமணம் செய்து கொண்ட HRH சமர்ஜித்சிங் கெய்க்வாட்(HRH Samarjitsinh Gaekwad) தற்போது பழைய அரச குடும்பத்திற்கு தலைமை தாங்குகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *