வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் மசோதா: நாடாளுமன்ற மேலவையும் ஒப்புதல்…
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்படுவது மற்றும் இரட்டைக் குடியுரிமை தொடர்பான மசோதாவை ஜேர்மன் நாடாளுமன்றத்தின் மேலவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் மசோதா
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்படுவது மற்றும் இரட்டைக் குடியுரிமை தொடர்பான மசோதா ஜேர்மன் நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மேலவையும் ஒப்புதல்…
இந்நிலையில், அந்த மசோதா நாடாளுமன்ற மேலவையாலும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று அந்த மசோதாவை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.
மசோதாவால் வெளிநாட்டவர்களுக்கு என்ன நன்மை?
ஜேர்மனியில் வாழ்வோர், ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமை வைத்திருப்பது இனி சாத்தியமாகிவிடும். இதற்கு முன்னிருந்தது போலில்லாமல், ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க, வெளிநாட்டவர் ஒருவர் எட்டு ஆண்டுகள் காத்திருந்ததற்கு பதிலாக, இனி ஐந்து ஆண்டுகள் முடிந்ததுமே அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். சில சிறப்பு சூழல்களில், மூன்று ஆண்டுகள் முடிந்ததுமே கூட, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்படும்.
அத்துடன், வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், அவர்களுடைய பிள்ளைகள் தாமாகவே ஜேர்மன் குடியுரிமைக்கு தகுதி பெற்றுவிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.