கருப்பு- வெள்ளை… டைட்டான ஆடையில் க்யூட்டாக வந்த தமன்னா- போட்டோஸ்
ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் சக்சஸ் மீட்டில், நடிகை தமன்னா கருப்பு-வெள்ளை உடையில் டைட்டான ஆடையில் க்யூட்டாக வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை தமன்னா நவீன நாடக நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவுக்குள் நுழைந்தார். தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி மொழி படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரீஸிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமன்னா தமிழ் சினிமாவில், சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். நடிகை தமன்னா தமிழுக்கு வந்திருக்கிறார். தற்போது, அரண்மனை 4 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் உலக அளவில் பிரபலமானார். காவாலா பாடல் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து வைரலானது. தற்போது கணிசமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா பற்றி ஊடகங்கள் கிசுகிசுக்கள் பரவிய நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமன்னா, விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தினார்.
சமீப காலமாக கவர்ச்சியாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது, ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் சக்சஸ் மீட்டில், மிகவும் கவர்ச்சியாக கருப்பு-வெள்ளை டைட்டான ஆடையில் வந்து கலந்து கொண்டார். இந்த சக்சஸ் மீட்டில் தமன்னா கவர்ச்சியான உடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தமன்னாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.