பாகிஸ்தானில் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தானில் கராச்சி மாநகரிலுள்ள தேர்தல் ஆணையக அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த குண்டு வெடிப்பு சம்பவமானது இன்று (03.02.2024) இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்முறை சம்பங்கள் அதிகரித்து வருவது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அண்மையில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்காள் கட்சியின் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று தேர்தல் அலுவலக வளாகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.