நம்முடன் துணைக்கு வரும் புண்ணியங்கள்..! முன்னோர்களுக்கு வருடம் தவறாமல் திதி பூஜை செய்தால்…
நாம் வரும் போது எதையும் கொண்டு வருவதில்லை. ஆனால் நாம் இவ்வுலகை விட்டு போகும் போது, நாம் செய்த புண்ணியங்களை மட்டுமே நம்முடன் கொண்டு செல்ல முடியும். நாம் செய்யும் புண்ணியங்கள் நமக்கு மட்டுமன்றி நம்முடைய தலைமுறைகளுக்கும் சென்று சேரும்படி செய்ய வேண்டியது நமது கடமையாகும். என்ன என்ன புண்ணியம் செய்தால்,அது நம்முடைய எத்தனை தலைமுறைக்கு போய் சேரும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா…?
பசித்த உயிருக்கு உணவிடுவது மிகப் பெரிய புண்ணியத்தை தரும். அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
தெய்வம் உறையும் திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
நம்மை இந்த உலகத்திற்கு அழைத்து வந்த முன்னோர்களுக்கு வருடம் தவறாமல் திதி பூஜை செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
பித்ருகளுக்கு மோட்சம் கிடைக்க உதவுவது 6 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
புனித நதிகளில் நீராடினால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
காப்பாற்ற யாரும் இல்லாமல் அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
தேவர்கள் உறையும் பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
திருமணம் ஆகாமல் தவிக்கும் ஒரு ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
நாம் இறந்தப் பின் நமக்கு என்ன பதவி கிடைக்கும் என்பது நமக்கு தெரியாது ஆனால், வாழும் போது பிறருக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதே சிறப்பு.