தடுக்கப்பட்ட காசா போர் நிறுத்தம்: அமெரிக்காவின் வீட்டோக்கு சீனா கண்டனம்

காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தி இருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தோல்வியில் முடிந்த காசா போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் காசா போர் நிறுத்தத்தை(Israel Gaza ceasefire) வலியுறுத்தி அல்ஜீரியாவின் தீர்மானம் (Algeria’s resolution) கொண்டு வரப்பட்டது.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 13 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை(US veto) பயன்படுத்தி காசா போர் நிறுத்த தீர்மானத்தை ரத்து செய்தது.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வழங்கிய தகவலில், அல்ஜீரியாவின் தீர்மானம் போர் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை ஆபத்தில் தள்ளும் என தெரிவித்துள்ளது.

மற்றொரு முக்கிய உறுப்பினரான பிரித்தானியா இந்த தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை.

சீனா கண்டனம்
இந்நிலையில் காஸா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் கோரும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தி இருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதில், அமெரிக்காவின் செயல்பாடு தவறான தகவலை முன்நிறுத்துவதாகவும், தொடர் அட்டூழியங்களுக்கு பச்சை விளக்கு காட்டுவதாகவும் இருப்பதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய சீனாவின் ஐ.நா தூதர் ஜாங் ஜுன்(China’s UN ambassador Zhang Jun) ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தலையீடும் என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

காசா போர் தாக்குதல் முழு மத்திய கிழக்கு பிராந்தியங்களையும் சீர்குலைக்கிறது, மேலும் இது மிகப்பெரிய போர் அபாயத்தை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *