Blue Star – ப்ளூ ஸ்டார் படத்தில் நடிக்கவிருந்தது முதலில் அவர்தான்.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்

சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

சாந்தனு, அசோக் செல்வன், பிருத்வி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அந்தப் படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.

தமிழில் முக்கியமான சினிமாக்களை இயக்குபவர் பா.இரஞ்சித். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மின்னிக்கொண்டிருக்கும் அவர் பலரை இயக்குநர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை என புது புது இயக்குநர்களை வைத்து படங்களை தயாரிக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் ப்ளூ ஸ்டார் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் சாந்தனு, அசோக் செல்வன், பிருத்வி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

நல்ல ரெஸ்பான்ஸ்: படமானது கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. ஊர் மற்றும் சேரி ஆகிய இரண்டு பகுதிகளின் கிரிக்கெட் டீமை வைத்தும்; அந்த இரண்டு டீம்களும் சேர்ந்து செயல்பட்டால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதையும் மையமாக வைத்தும் திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது ஏகோபித்த ஆதரவுகளை கொடுத்துவருகின்றனர். இப்படத்துக்கு போட்டியாக களமிறங்கிய சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தைவிட ப்ளூ ஸ்டார் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *