Body Odour : உடலில் துர்நாற்றம் ஏற்படக்கூடிய காரணங்களும்! தடுக்கும் தீர்வுகளும்!

உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காரணங்கள்

உடல் துர்நாற்றத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது நம் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையது. உடலில் துர்நாற்றம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அது நமது உடல் சுகாதாரத்திலும், உடல் நலனிலும் பிரதிபலிக்கிறது. எனவே அதற்கான காரணங்களையும், அதை எவ்வாறு தடுப்பது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

மனஅழுத்தம் மற்றும் பதற்றம்

மனஅழுத்தம் அதிகரித்தால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். மனஅழுத்தம் மற்றும் பதற்றம் உடலில் துர்நாற்றம் வீசுவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

மருத்துவ நிலைகள்

சில குறிப்பிட்ட உடல் உபாதைகள் குறிப்பாக நீரிழிவு நோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள் போன்றவையும் கடும் உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் மற்ற மாற்றங்களாலும் ஏற்படுகிறது.

எடை அதிகரிப்பு

உடலில் அதிக எடைபோட்டால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அந்த சுருக்கங்களுக்குள் பாக்டீரியாக்கள் வளரும். அது கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். உடல் பருமன் உடலில் அதிக பாக்டீரியா வளர்வதற்கு காரணமாகிறது. அது வியர்வையையும், துர்நாற்றத்தையும் அதிகரிக்கிறது.

சுகாதாரமின்மை

சுகாதாரமின்றி உடலை பராமரித்தால், அதுவும் உடலில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. தினமும் குளிக்கவில்லையெனில், உங்கள் சருமத்தில் அது பாடீரியாவை வளர வழிவகுத்து, உடலில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பாகிவிடும். மேலும் இறந்த சரும செல்களும், தூசியும் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

வியர்வை சுரப்பிகள்

உடல் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் வியர்வை சுரப்பியில் இருந்து சுரக்கும் வியர்வையும், சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களும் சேரும்போது உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது.

உணவு

ஜங்க் உணவுகளும் உடலில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. வெங்காயம், பூண்டு மற்றும் மற்ற மசாலாக்களில் சல்ஃபர் கலவை அதிகம் உள்ளது. இது கெட்ட நாற்றத்தை ஏற்படுத்தி, உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

தொற்று

சருமத்தொற்று, உடல் துர்நாற்றத்தின் அடிப்படை காரணமாகும். சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்ஜை தொற்று காரணமாக உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது. சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்று அதிகரிக்கும்போது, வியர்வையும் அதிகரிக்கிறது.

ஹார்மோன் மாற்றங்கள்

பூப்படையும் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின்போது வியர்வை அதிகரிக்கிறது. அது வியர்வை சுரப்பிகளில் உருவாகும் வியர்வை அதிகரிப்பதால் ஏற்படுவதாகும். அக்குளில் இருந்து அப்போதுதான் துர்நாற்றம் வீச துவங்குகிறது. வியர்வை சுரப்பி அதிவேகத்துடன் செயல்படுகிறது. பூப்படையும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வியர்வை மற்றும் துர்நாற்றத்துக்கு காரணமாகின்றன.

உடல் துர்நாற்றத்தை தடுப்பது எப்படி? இதோ பல வழிகள் உள்ளன.

டியோடரன்ட் பயன்படுத்துங்கள்

நல்ல நறுமணம் வீசக்கூடிய டியோடரன்ட்கள் பயன்படுத்துவது உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள வியர்வை எதிர்ப்பு வியர்வை துவாரங்களை அடைக்கிறது.

பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்

பருத்தி ஆடைகளை உபயோகிக்கும்போது, அவை வியர்வையை குறைக்கும். அது காற்றோட்டத்தையும் கொடுக்கிறது.

நீர்ச்சத்துடன் இருங்கள்

அதிகளவில் தண்ணீர் குடிப்பது உடலில் துர்நாற்றம் வீசுவதை தடுக்கிறது. அது உடலில் வெப்பநிலையையும் சரியாக பராமரிக்க உதவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *