டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திற்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. தர்பங்கா – டெல்லி ஸ்பைஸ்ஜெட் விமானத்தைக் குறிவைத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதல் கட்டத் தகவல்களின்படி, விமானம் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டில் விடுக்கப்பட்டதை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) குழுவினர் பயணிகளின் சோதனையிட்டனர். வெடிகுண்டு நிபுரணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கவிருக்கும்போது மிரட்டல் அழைப்பு வந்ததாகத் தெரிகிறது. “இன்று, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த தர்பங்கா – டெல்லி விமானம் தொடர்பாக டெல்லி விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது” என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அழைப்பு போலியானது எனத் தெரியவந்தது. இருப்பினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

டெல்லியில் இந்தியக் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இரண்டு நாள் முன்னதாக விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *