எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்: தினசரி இந்த உணவுகளில் ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்க…
கால்சியம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை எலும்புகளையும், பற்களையும் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும்.
இதர ஊட்டச் சத்துக்களைப் போல் கால்சியமும் நமக்கு மிகவும் தேவை. இவற்றை தினமும் உணவில் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
ஆண்களை விட பெண்களுக்கு கால்சியம் சத்து அதிகமாக தேவைப்படுகின்றது. எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலுக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாததாகிறது.
வயதாகும்போது மூட்டுவலி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகின்றது.
அதனை தவிர்த்துக்கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கசகசா
கசகசா இரும்பு, கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளின் சிறந்த மூலமாக காணப்படுகின்றது.
அதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுக்க மிகவும் துணைப்புரியும்.
பால் மற்றும் பால் பொருட்கள்
பொதுவாகவே பால் பொருட்களில் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே பால், பாற்கட்டி, தயிர் மற்றும் பன்னீர் போன்றவற்வை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால் முதுமையில் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் தவிர்த்துக்கொள்ள உதவும்.
சியா விதைகள்
சியா விதைகள் கால்சியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். ஒவ்வொரு 100 கிராம் சியா விதையிலும் சுமார் 400 முதல் 600 மி.கி கால்சியம் நிறைந்துள்ளது. பால் பொருட்களை சாப்பிட விரும்பாதவர்கள் தாராளமாக இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, இரும்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது. இவற்றை தினமும் சாப்பிடுவதால் எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவையான கால்சியம் நிறைவாக கிடைக்கின்றது.
நட்ஸ் விதைகள்
பாதாம், எள் மற்றும் ஆளி விதைகளில் கால்சியம் அதிகளவில் காணப்படுகின்றது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் கே, பல்வேறு தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் நிறந்த மூலமாக இவை காணப்படுகின்றது. இவற்றை தினசரி சாப்பிடுவதால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.