சீக்கிரம் புக் பண்ணுங்க.. இந்த முன்னணி கம்பெனி கார்களின் விலை 2024ல் கூடப்போகுது!
ம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவும், போலி சிம் கார்டுகளை கண்டறியவும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மூலப்பொருள்கள் விலை உயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு இருக்கும். 2023ம் ஆண்டு ஏப்ரலில் மாருதி சுசூகி 0.8 சதவீதம் விலையை உயர்த்தியது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் தனது கார் விலையை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு சதவீதம் உயர்வு இருக்கும் என்பதைத் தெரிவிக்கவில்லை.
2024ம் ஆண்டு ஜனவரி மாதம், Audi நிறுவனம் 2 சதவீதம் அளவுக்கு விலையை உயர்த்துகிறது. “ஆவ்டி இந்தியா” நிறுவன சிஇஓ பல்பீர் சிங் தில்லான், இதுபற்றி கூறுகையில், ஆவ்டி பிராண்டுக்கு பிரீமியம் அந்தஸ்து இருப்பதால் கார் விலையை அதிகரிப்பதால் பாதிப்பு வராது என கருதுகிறோம். தயாரிப்பு மற்றும் செயல்பாடு செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் நாங்கள் விலை உயர்வைச் செய்ய வேண்டியிருக்கிறது.
மஹிந்திரா இப்போது எஸ்யூவிக்களைதான் விற்பனை செய்து வருகிறது. அதன் விலையும் உயர்கிறது. எவ்வளவு என்று தெரியவில்லை. இதேபோன்று ஹூண்டாய், எம்ஜி மோட்டார்ஸும் கார் விலை உயர்வை அறிவிக்க உள்ளன. பிஎம்டபிள்யூ, போக்ஸ்வேகன், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ், வால்வோ, நிஸான், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தங்களது கார் விலையில் 2 முதல் 3 சதவீதம் உயர்த்தியுள்ளன. அதிக அம்சங்களுடன் (features) அறிமுகப்படுத்தபடும் கார்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்படுகிறது.
மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் மாருதி விலை உயர்வை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் நிலைமையும் இதுதான். டாடாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் அதிகரிக்கிறது. பயணிகள் கார் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை ஜனவரியில் அதிகரிக்கப்படும்.
எவ்வளவு உயர்வு இருக்கும் என்ற விவரம் விரைவில் தெரியப்படுத்தப்படும் என்று டாடா மோட்டார்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 2023 ஆண்டு இறுதியில் விற்பனையை அதிகரிப்பதற்காக தங்களது கார் விலையில் ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி தந்து ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா போன்ற நிறுவனங்கள் அறிவித்தன.