”நோய் எதிர்ப்பு சக்தி”யை அதிகரிக்கும் இயற்கை மருத்துவம்!
நமது உடலை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பொறுப்பு வகிக்கிறது.
இதனால் நமது உடல் ஆரோக்கியமாக உள்ளது. பல்வேறு உறுப்புகள் சுரப்பிகள், திசுக்கள் மற்றும் சில செல்கள் புரதங்களை கொண்டுள்ளது. இவை தொற்று நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.
நோய்க்கிருமிகள் உடலில் நுழையும் பொழுது நோய் எதிர்ப்பு அமைப்பு தூண்டப்பட்டு வெளியேற்றுவதால் நோய்க்கிருமிகள் தடுக்கப்படுகிறது. நோய் கிருமிகளை எதிர்க்க உடலை பாதுகாக்க சரியான உணவு உடலுக்கு கிடைக்க வேண்டும்.
* சிட்ரஸ் பழங்கள் அதிகம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமாக உள்ளது.
விட்டமின் சி, வெள்ளை அணுக்களில் உற்பத்தி செய்யப்பட்டு நோய்களை எதிர்த்து போராடுகிறது. விட்டமின் சி அதிக அளவில் புளிப்பு, சிட்ரஸ் பழங்களில் உள்ளது. எனவே சளி இருமலுக்கு எதிராக பல்வேறு மருந்துகளை உட்கொள்ளாமல் சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
* இந்திய உணவு வகைகளில் மஞ்சள் ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக உள்ளது. இது பல்வேறு நன்மைகளை தருகிறது. மஞ்சளில் அதிக அளவு குர்குமின் உள்ளது. இது உடற் பயிற்சியினால் ஏற்படும் தசை சேதத்தை குறைக்க உதவுகிறது. கீழ்வாதம், முடக்குவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மஞ்சள் நல்ல மருந்தாக அமைகிறது. இதனால் உணவில் மஞ்சள் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.