ANC டெக்னாலஜியுடன் புதிய ஹெட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ள Bose நிறுவனம்… சிறப்பம்சங்கள் என்னென்ன?
சிறந்த சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும் ஆடியோ டிவைஸ்களை அறிமுகப்படுத்துவதில் பிரபலம் இருக்கும் Bose நிறுவனம், தனது QuietComfort Ultra ஹெட்ஃபோன்களை உலகளாவிய சந்தையில் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், ஆக்ட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் கூடிய தனது QuietComfort Ultra ஹெட்ஃபோன்ஸ்களை தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Bose நிறுவனத்திடமிருந்து வெளிவந்திருக்கும் இந்த புதிய ஆடியோ தயாரிப்பின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்க்கலாம்.
ஸ்பெசிஃபிகேஷன்கள் என்னென்ன? :
அலுமினியம், பிளாஸ்டிக் மற்றும் லெதர் உள்ளிட்டவற்றின் கலவையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது QuietComfort Ultra. ஓவர்-தி-இயர் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இதன் இயர்கப் மற்றும் ஹெட் பேண்டில் Plush cushions கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நீண்ட நேரம் பயன்படுத்தும் போது அசௌகரியம் ஏதும் உணராமல் இருப்பதை உறுதி செய்கிறது.
நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னலாஜி (ANC) :
Bose நிறுவனம் ANC-க்காக கஸ்டம்-டிசைன்ட் சிப்-ஐ இந்த புதிய ஹெட்ஃபோன்களில் ஒருங்கிணைத்துள்ளது. மேலும் இந்த புதிய ஹெட்ஃபோன்கள் பின்னணியில் கேட்கும் இரைச்சல்களை திறம்பட ஃபில்டர் செய்ய மைக்ரோஃபோன் அரே பீம்ஃபார்மிங்கை பயன்படுத்துகின்றன. இது யூஸர்களுக்கு இடையூறு இல்லாத கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது.
ஆடியோ குவாலிட்டி :
SBC, AAC மற்றும் Qualcomm aptX போன்ற பல்வேறு கோடெக்ஸ்களுக்கான சப்போர்ட்டை இது கொண்டுள்ளது. இது QuietComfort Ultra-வை பல்வேறு டிவைஸ்களுடன் இணக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது. இந்த ஹெட்ஃபோன்கள் 35-மிமீ ஃபுல்-ரேஞ்ச் டிரைவர்ஸ் மற்றும் போஸ் இம்மர்சிவ் ஆடியோவை (Bose Immersive Audio) சப்போர்ட் செய்கிறது. மேலும் மல்ட்டி-டைமன்ஷ்னல் சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸை வழங்க proprietary digital signal processing-ஐ பயன்படுத்துகிறது.
ஸ்மார்ட் கன்ட்ரோல்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி :
இந்த புதிய Bose QuietComfort Ultra ஹெட்ஃபோன்களின் வலதுபக்க இயர்கப்பானது பவர் பட்டன், வால்யூம் கன்ட்ரோலுக்கான கெப்பாசிட்டிவ் டச் ஸ்ட்ரிப் மற்றும் மல்டிஃபங்க்ஷன் பட்டன் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 30 அடி ரேஞ்ச் கொண்ட ப்ளூடூத் 5.3, இடது பக்க இயர்கப்பில் எல்இடி இண்டிகேட்டர், 2.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்காக USB டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.ஆப்பிள் டிவைஸ்களோடு கனெக்ட் செய்யும் போது Siri-க்கான கன்ட்ரோல் ஃபங்ஷனாலிட்டிஸ்களை பட்டன்கள் வழங்குகின்றன.
பேட்டரி லைஃப் :
ANC டெக்னலாஜியை எனேபிள் செய்திருந்தால் QuietComfort Ultra ஹெட்செட்டானது 18 மணிநேரம் வரை பேட்டரி லைஃபை வழங்கும் என்றும், வழக்கமான பயன்பாட்டில் 24 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் இருக்கும் என்றும் Bose நிறுவனம் கூறுகிறது. தவிர USB-C போர்ட் வழியாக இந்த ஹெட்செட்டை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணிநேரம் ஆகும் என்றும், ஃபாஸ்ட் 15 நிமிட சார்ஜ் 2 மணிநேரம் வரையிலான ப்ளேபேக் டைமிங்கை வழங்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
விலை எவ்வளவு? :
Bose நிறுவனத்தின் புதிய QuietComfort Ultra இந்தியாவில் ரூ.35,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் குரோமா உள்ளிட்ட முக்கிய ரீடெயிலர்களிடம் வாங்க கிடைக்கிறது. இது பிளாக் மற்றும் ஒயிட் ஸ்மோக் உள்ளிட்ட 2 கலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.