Bounce Infinity எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை குறைப்பு… எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் சமீப வருடங்களாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதனால் பல புதிய நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை தொடங்கியுள்ளதோடு இன்னும் பல சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி தங்களது வாகனங்களை மக்களிடம் பிரபலப்படுத்த தள்ளுபடிகளையும் இந்நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

சமீபத்தில் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தியாளரான Bounce Infinity நிறுவனம், தங்களது E1+ ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை 21 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் காரணமாக Bounce Infinity எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையில் ரூ.24,000 குறைக்கப்பட்டு தள்ளுபடி விலையாக ரூ.89,999-க்கு கிடைக்கிறது. இதற்கு முன்பு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.13 லட்சம் ஆகும்.

Bounce Infinity எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான தள்ளுபடி விலை வேலிடிட்டி எத்தனை நாள்?

2024-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இந்த தள்ளுபடி சலுகையை பெற முடியும். மேலும் இந்தியா முழுவதும் உள்ள Bounce Infinity E1+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை பொறுந்தும். இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், இந்த ஸ்கூட்டரை Bounce Infinity நிறுவனத்தின் இணையதளம் மூலமாக வெறும் ரூ.500 கொடுத்து முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

Bounce Infinity E1+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் :

E1+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எளிதில் கழற்றி மாட்டிக்கொள்ளும் 1.9 kWh லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதற்கு சார்ஜ் செய்வதற்கு நம் வீட்டுச் சுவர்களில் வழக்கமாக இருக்கும் ஸ்டாண்டர்டு 15 Amp சாக்கெட்டைப் பயன்படுத்தலாம்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2 kW பவர் மோட்டார் உள்ளது. இதனால் அதிகபட்சமாக மணிக்கு 65கி.மீ வேகம் வரை இதில் செல்ல முடியும். எல்லா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் அதன் ரேஞ்ச் தான் முக்கியமாக பார்க்கப்படும். Bounce Infinity E1+ ஸ்கூட்டரை பொறுத்தவரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 70கி.மீ வரை ஓட்டிச் செல்லலாம் என நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கூடுதல் சிறப்பம்சங்களை சொல்ல வேண்டுமென்றால் லிக்கியூட் கூல்ட் பேட்டரி தொழில்நுட்பம், விரைவான சார்ஜ் ஏறும் வசதி, அதிகப்படுத்தப்பட்ட ரேஞ்ச், ஸ்மார்ட் கனெக்டிவிட்டி ஆகியவற்றைக் கூறலாம்.

தற்போது Bounce Infinity நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 70-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் இருக்கின்றன. இந்த தள்ளுபடி சலுகையை நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப் மையங்களில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கிடையில் Sun Mobility நிறுவனத்திடம் இருந்து 30,000-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஆர்டரையும் சமீபத்தில் கைப்பறியுள்ளது Bounce Infinity நிறுவனம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *