சர்ச்சைக்குரிய வகையில் பந்துவீச்சு. சோயிப் மாலிக்கின் காண்ட்ராக்ட் ரத்து!
திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர்.
இதையடுத்து இருவருமே தற்போது தங்கள் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதையடுத்து சானியாவை விவாகரத்து செய்த மாலிக், சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த நிலையில் அவர் இப்போது பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடி வருகிறார்.
இதில் ஒரு போட்டியில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் மூன்று நோ பால்களை வீசினார். இதையடுத்து அவர் மேட்ச் பிக்ஸிங் செய்திருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவரின் BPL ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.