பாடசாலையில் சிறுவன் செய்த கொடுஞ்செயல்… சிறை தண்டனையை எதிர்கொள்ளும் பெற்றோர்

அமெரிக்காவில் பாடசாலை துப்பாக்கிச் சூடில் ஈடுபட்ட சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கித் தந்த தந்தையை குற்றவாளி என குறிப்பிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளி
தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவம் 2021ல் நடந்துள்ளது. ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த குற்றத்திற்காக James Crumbley மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது.

தற்போது James Crumbley குற்றவாளி என வியாழக்கிழமை மிச்சிகன் நீதிமன்றம் உறுதி செய்துளது. தங்கள் மகனின் செயல்களுக்காக அமெரிக்காவில் கொடூரமான படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதல் பெற்றோர் இவர்கள் என்றே கூறப்படுகிறது.

15 ஆண்டுகள் வரையில்
47 வயதான ஜேம்ஸ் க்ரம்ப்ளே மற்றும் அவரது மனைவியும் தலா 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இவர்களின் மகன் ஈதன் நவம்பர் 30, 2021ல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் ஈதன் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *