Bramayugam Twitter Review : ராட்சஸன் மாதிரி மம்மூட்டி.. ட்விட்டரில் பிரம்மயுகம் படத்தை பாராட்டும் ரசிகர்கள்
மம்மூட்டி நடித்து இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் “பிரம்மயுகம்”. பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நடிகர் மம்மூட்டி கூறியிருந்தார். இந்நிலையில் பிரம்மயுகம் படத்தைப் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தேர்ந்த திரைக்கதையும் சிறப்பான நடிப்புல் கலந்து இப்படம் அமைந்துள்ளதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.