ராம்ராஜ் நிறுவனத்துக்கு பிராண்ட் அம்பாசட்டாராக ஒப்பந்தம் ஆன காந்தாரா ஹீரோ!
ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். ஆனாலும் பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடி 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளது. இரண்டாம் பாகம் பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்நிலையில் இப்போது ரிஷப் ஷெட்டி ராம்ராஜ் நிறுவனத்தின் வேட்டி சட்டைக்ளுக்கான புதிய விளம்பர தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை ராம்ராஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.