பிராண்ட் கார்டியன்ஷிப் பட்டியல்.. உலக அளவில் முகேஷ் அம்பானிக்கு 2வது இடம்!

பிராண்ட் கார்டியன்ஷிப் பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உலகளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

நிறுவனங்களின் மதிப்புகள் குறித்து உலகளவில் கணக்கிடும் பிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனம், பிராண்ட் கார்டியன்ஷிப் என்ற ஆய்வு பட்டியலை வெளியிட்டுள்ளது.

பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோரின் நலன்களையும் கருத்தில் கொண்டு வணிக மதிப்பை உருவாக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெல்லா, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், டெஸ்லாவின் எலான் மஸ்க் உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் சீனாவைச் சேர்ந்த டென்சென்ட் நிறுவனத்தின் மா ஹுவாடெங் (Ma Huateng ) முதலிடத்தில் உள்ளார். அதேபோல பிராண்ட் கார்டியன்ஷிப் இந்திய அளவிலான பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *